
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரானா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நியாய விலைக்கடை பணியாளர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். குழு காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். ரேஷன் பொருட்களை நூறு சதவீதம் வழங்க வேண்டும். பொட்டலம் முறை அமல்படுத்த வேண்டும், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை பணியாளர்களுக்கு இணையாள சம்பளம் வேண்டும், சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டும், பயணப்படி, ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில துணைத்தலைவர் வி.பி.தினகரன், மாநில இணை செயலர் எஸ்.மாரிமுத்து, மாவட்ட செயலர் பி.ஞானசேகரன், மாவட்ட பொருளாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.