Home செய்திகள் மண்டபம் பேரூராட்சி பணியாளர்கள் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு பணி

மண்டபம் பேரூராட்சி பணியாளர்கள் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு பணி

by mohan

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராக ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இரா.ராஜா அறிவுரைபடி கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மண்டபம் பேரூராட்சி பகுதியில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டபம் பேரூராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல் அலுவலர் கி. ஜனார்த்தனன் தலைமையில் இளநிலை உதவியாளர் சு.முனியசாமி, மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், துப்புரவு பணிபார்வையாளர் அ.ஜாகீர் உசேன் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் கொரொனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்கள், வங்கிகள், ஏடிஎம் மையங்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மே லும் மருத்துவமனைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும். நகை, ஜவுளி, பேன்ஸி ஸ்டோர், மின் சாதன உதிரி பாகங்கள் கடை மற்றும் பர்னிச்சர் மார்ட் உள்ளிட்ட இதர கடைகள் அனைத்தும் கட்டாயம் மூட வேண்டும். இதனை மீறும் கடை மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலி பெருக்கி மூலம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்தோர் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!