Home செய்திகள் கொரோனா அறிகுறி என்றால் உங்களுக்கு என்ன நடக்கும்?

கொரோனா அறிகுறி என்றால் உங்களுக்கு என்ன நடக்கும்?

by Askar

கொரோனா அறிகுறி என்றால் உங்களுக்கு என்ன நடக்கும்?

கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எதை செய்ய வேண்டும் ? என்பதையும் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகள் எப்படி கையாளப்படுகிறார்கள் ? என்பதையும் சிறப்பு காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…

கொரோனா பற்றிய பயம் தன் சாதிக்கு இல்லை என்று பேசித்திரியும் இவர்களைப் போன்றவர்களின் பேச்சை கேட்டால் அடுத்த வாரம் வருகின்ற கொரோனா கிருமி கூட, ஷேர் ஆட்டோவில் ஏறி அடுத்த நொடியே தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது..!

கொரோனா வைரஸ் குறிப்பிட்ட மதத்தையோ ஜாதியையோ தாக்காது என்று எவரும் சொல்ல முடியாது..! கொரோனா தொற்று உள்ளவர் கைபட்டால் அல்லது அவர் தொடும் பொருளைத் தொட்டால் அழையா விருந்தாளியாக உங்களுடன் வந்து விடும் கொடிய விஷக்கிருமி கொரோனா என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..!

கொரோனா அறிகுறி என்று மருத்துவர்களால் சுட்டிக்காட்டப்படும் இருமல் தொடர் காய்ச்சல், சளி இருக்குமானால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்படி மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் முன்னரே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அதைவிட முக்கியம்.

முககவசம் அணிவது முதல் அதனை அப்புறப்படுத்துவது வரை மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளவேண்டும், கைகளில் நோய்த் தொற்று பரவுவதை தவிர்க்கக் கூடிய கையுறை அணிந்தாலும், அதன் மேல் பகுதியில் கைகள் படாமல் கழற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும்

தும்மல் வந்தால் முழங்கையால் மறைத்து கொள்ளுங்கள். கதவுகளைத் திறக்கும் போது முழங்கையை பயன்படுத்துங்கள், லிப்ட் மற்றும் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கும்போது விரல்கள் இல்லாமல் குச்சிகளை பயன்படுத்தலாம்.

இப்படியெல்லாம் முன் எச்சரிக்கையாக இல்லாமல் ஊருக்குள் மெத்தனமாக உலாவரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான நபராக நீங்கள் இருந்தால் நிச்சயம், உங்களை கொரோனா ஆட்கொள்ளும்..! அப்போது இப்படித்தான் அழைத்து பேச ஆள் இல்லாமல் நிர்க்கதியாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் திக் திக் மனநிலையோடு தவித்து நிற்பீர்கள்..!

உங்களுக்கு ஆறுதல் சொல்ல நண்பர்களோ உறவினர்களோ பக்கம் இருக்க மாட்டார்கள், உங்களை அழைத்து செல்ல வரும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் இருந்தாலும் கூட, உங்களது காற்று கூட தங்கள் மீது பட்டுவிடக் கூடாது என்று தள்ளி நின்றே வேனில் ஏற அறிவுறுத்துவர்..!

உங்களை மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் பகுதியில், உங்களுடன் ஒரே ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவார், அவரும் தனது உயிரை உங்களுக்காக கொடுக்கும் மனப்பக்குவத்தில் இருந்தால் மட்டுமே உங்களுடன் வருவார்..! இல்லையேல் நீங்கள் தன்னந்தனியாக தான் கொரோனாவுடன் போராட வேண்டியதிருக்கும்..!

எனவே, முன் எச்சரிக்கையாக குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்து கொள்ளலாமா ? அல்லது ஊர் சுற்றி கொரோனாவை உடலில் வரவழைத்துக் கொள்ளலாமா ? என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்..!

கொரோனா மீது அச்சம் கொள்ளுங்கள்..! வீட்டிலேயே பாதுகாப்புடன் தனித்து இருங்கள்…! அது அனைவருக்கும் நலம் பயக்கும்..! இதில் மெத்தனம், உயிரை மெல்ல சாகடிக்கும் கொரோனாவை வரவழைக்கும் என்பதை உணருங்கள்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!