Home செய்திகள் ஐடி., துறையில் வேலைக்கு வெளிநாடு செல்லும் மோகம் தவிர்த்து நியாயமான சம்பளத்துடன் உள்ளூரில் வேலை வழங்கப்படும் ;எஸ் – இன்போடெக் நிறுவன இயக்குநர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் ஐடி (தகவல் தொழில் நுட்பவியல்)நிறுவனம் எஸ்_இன்போடெக் திறப்பு விழா நடந்தது. இந்தியா, மலேசியா, தாய்லாந்து, துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தகவல் தொழில் நுட்பம், தீ தடுப்பு உபகரணங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாடு, ஜவுளி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் தனது எல்லையை விரித்துள்ள சிராஜ் குரூப் பிரைவேட் லிமிடெட்., அதன் குழும நிறுவனமான எஸ்- இன்போடெக் திறப்பு விழா இராமநாதபுரத்தில் நடந்தது. ராமநாதபுரம் ராஜா பாபு சண்முகநாத சேதுபதி தலைமை வகித்தார். சிராஜ் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் ஏ.சாகுல் ஹமீது, மலேசியா சிராஜ் குரூப் ஆப் கம்பெனி இயக்குநர் டி.முகமது ஹனீப் , தாய்லாந்து, பாங்காக் பெட்செட் ஜெம்ஸ் நிறுவனத்தின் சேர்மன் எஸ்.கியாசுதீன், சேலம் சண்முகா மெடிக்கல் ரிசர்ஜ் பவுண்டேஷன் டிரஸ்ட் சேர்மன் டாக்டர் பி.எஸ். பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர்.

பட்டிமன்ற பேச்சாளர் ஜெ.சுல்த்தானா பர்வீன் வரவேற்றார்.நிறுவன செயல் திட்டம் குறித்து சிராஜ் குரூப் ஆப் கம்பெனி மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ்.முகமது யூசுப் அலி பேசினார்.மலேசியா தொழிலதிபர் டாக்டர் முகைதீன் அப்துல் காதர், இராமநாதபுரம் ஆசி மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் ஆசிக் அமீன், தொழிலதிபர்கள் ரீடு செல்வம் (அரியலூர்), புகழேந்தி (சேலம்), ஸ்டீபன் (நாகர்கோவில்), ரகுபதி (கோவை), ஏ.ஆர்.துல்கீப் கான் (சித்தார்கோட்டை), எம்.மன்சூர் அலி கான், சேலம் பெஸ்ட் பிசினஸ் கம்பெனி சேர்மன் டாக்டர் என்.முத்துக்குமார், ஆசியன் பில்டிங் மெட்டீரியல்ஸ் மேலாண் இயக்குநர் முஜிபுர் ரஹ்மான், இராமநாதபுரம் வர்த்தகர் சங்கத் தலைவர் பா.ஜெக தீசன், இராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அ. அஸ்மாக் அன்வர்தீன், ஆடிட்டர் ஜெ.ரமேஷ் பாபு, வழக்கறிஞர் எஸ்.தேசிகன், அன்னூரி அறக்கட்டளை நிறுவனர் ஏ. அன்வர்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் இளைய மன்னர் பிரசாத் சேதுபதி நன்றி கூறினார். பிவிஎம் டிரஸ்ட் சேர்மன் தேசிய விருதாளர் வி.அப்துல் ரசாக் தொகுத்து வழங்கினார். எஸ்_இன்போடெக் சேர்மன் சாகுல்ஹமீது, மேலாண் இயக்குநர் முகமது யூசுப் அலி ஆகியோர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் என்ற உயரிய நோக்கில் நேர்காணல் மூலம் 500 பேரை தேர்வு செய்து வருகிறோம். பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க பல்வேறு தொழில்கள் தொடங்க உள்ளோம். இங்குள்ள இளைஞர்கள் சென்னை, பெங்களூரு மற்றும் வெளிநாட்டில் ஐடி துறையில் வேலை என்னும் மோகத்தை தவிர்த்து, வெளிநாடு , வெளி மாநில ஐடி நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் சென்னை பெங்களூரு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இணையான வேலை தரவேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கி உள்ளோம் என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!