பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகள், சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலம் வட்டம் ஆர்எஸ் மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட முஹம்மது கோயா தெரு (முன்னாள் பேரூராட்சித் தலைவர் அஜ்மல்கான் அவர்களுடைய வீட்டின்) அருகில் கொட்டப்படும் குப்பைகள் அல்லப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

அப்பகுதிக்கு குப்பை அள்ள கூடிய வாகனங்கள் சரியாக வராத காரணத்தினாலும், ஒருசில நேரத்தில் வாகனங்கள் வந்தாலும் முறையாக குப்பைகளை சேகரித்து செல்லாததாலும் அப்பகுதி மக்கள் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிவிடுகின்றனர்.கொட்டப்படும் குப்பைகளை அல்ல காலதாமதம் ஆவதால் குப்பைகள் காற்றில் பறந்து தெருக்களில், வாய்க்கால்களில் போய் விழுந்து சுகாதார சீர்கேட்டை உண்டாக்குகிறது.இதனால் அப்பகுதியில் வாழும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.ஒவ்வொரு முறையும் குப்பைகள் தேங்கி கிடக்கும் போது தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தால் மட்டுமே அது சரி செய்யப்படுகிறது.எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்தி அப்பகுதியில் குப்பையில் தேங்காமல் தினந்தோரும் சுத்தப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் ஆர்எஸ்மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்..

உதவிக்கரம் நீட்டுங்கள்..