Home செய்திகள் செங்கத்தில் பள்ளிகள்  திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் இல்லாமல்   வகுப்பறையில்  மாணவிகள் காத்துகிடந்தனர் 

செங்கத்தில் பள்ளிகள்  திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் இல்லாமல்   வகுப்பறையில்  மாணவிகள் காத்துகிடந்தனர் 

by mohan

, செங்கம் பகுதியில் தமிழக அரசின் உத்தரவின்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறந்தாலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் ஆசிரியர்கள் வருகைக்காக வகுப்பறைக்குள் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.  வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் செல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்   குறியாகியுள்ளதாக பெற்றோரி குற்றம் சாட்டினர்.  இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றால் ஆசிரியர்கள் கட்டாயம் 2 தடுப்பூசிகள்  செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் ஆசிரியர்கள் தடுப்பூசி போடாமல் இருந்ததால் வகுப்பறைக்குள் செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள் என ஒரு சாராரும், மாணவிகள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆசிரியர் அச்சப்பட்டுக் கொண்டு வகுப்பு செல்லவில்லை என மற்றொறு சாராரும் தெரிவிக்கின்றனர்.மாணவிகளே  சுத்தம் செய்த  வகுப்பறைகள். அதே போல் பள்ளிகள் முழுவதும் சரியான முறையில் தூய்மைப்படுத்த படாததால் சில வகுப்பறையில் மாணவிகளே நாற்காலிகளை சீரமைப்பது, பேப்பர்  மூலமாக உட்காரும்  நாற்காலிகளை  சுத்தம் செய்தனர்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால்  ஆர்வத்துடன் பள்ளிக்கு படிக்க வந்த மாணவிகளுக்கு வகுப்பறையில் ஆசிரியர்கள்  வராதது பெரும்  அதிர்ச்சிக்குள்ளாகி இருந்து  வருவதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.    எனவே  மாவட்ட நிர்வாகம்   மாணவிகளின்  கல்வித்தரத்தை  மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு சரியான நேரத்தில்  பாடங்களை நடத்த  ஆசிரியர்கள்  முன்வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com