வேலூரில் உள்ளாட்சி தேர்தல்.வாக்காளர் பட்டியல் வெளியீடு.

வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கிராம பகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறும் என தெரிகின்றது. இதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது.இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அலுவலக கூட்டரங்கில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.திட்ட முகமை இயக்குநர் ஆர்த்தி பெற்றுகொண்டார்.