இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாணம் திருவிழா ..

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாணம் திருவிழா 04/8/18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து 11.8.2018 அன்று அக்னி தீர்த்தக் கடலில் ராமர் தீர்த்தவாரி நடந்தது. ஆக.12ல் தேரோட்டம், ஆக.14 தபசு மண்டகப்படியிலிருந்து அலங்கார பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா சென்றார்.

இதை தொடர்ந்து இன்று (15.8.18) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கும்ப லக்னத்தில் கோயில் தெற்கு நந்தவன கல்யாண மண்டப அலங்கார மேடையில் பர்வத வர்த்தினி அம்பாளுக்கும், ராமநாதசுவாமிக்கும் உலக நன்மை வேண்டி திருக்கல்யாணம் நடந்தது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் மங்கையர்கரசி, கோயில் கட்டுமானப் பணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.