Home செய்திகள் சென்னை மாநகராட்சியில்  சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கை தாக்கல் செய்ய  5 லட்சம் பேர் மனு பெற்றுள்ளனர்..

சென்னை மாநகராட்சியில்  சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கை தாக்கல் செய்ய  5 லட்சம் பேர் மனு பெற்றுள்ளனர்..

by ஆசிரியர்

சென்னை மாநகராட்சியில்  5 லட்சத்து 15 ஆயிரத்து 669 சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வு தொடர்பான சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை தாக்கல் செய்ய படிவங்களை பெற்றுள்ளனர் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி சீராய்வு தொடர்பாக அரசால் 19.7.2018 மற்றும் 26.7.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், குடியிருப்பல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், இச்சீராய்வினை 2018–19ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணையின்படி, சொத்து வரி சீராய்வு செய்யும் பணி தொடங்கப்படவுள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும், தங்களது சொத்து தொடர்பாக சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை 31.8.2018-க்குள் கீழ்கண்ட முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள முகப்புகளில் உரிய படிவத்தினை பெற்று, மேற்படி சொத்து சுய மதிப்பீட்டு தொடர்பான அறிக்கையினை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் நேரடியாக சமர்ப்பிக்கவும்,

பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில்www.chennnaicorporation.gov.in சொத்து விவர அறிக்கை படிவத்தினை பதிவிறக்கம் செய்து சம்மந்தப்பட்ட மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்களில் உள்ள முகப்புகளில் நேரடியாக சமர்ப்பிக்கவும்,

பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள முகவரி (www.chennnaicorporation.gov.in) மூலமாகவும் சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை Online மூலம் பதிவேற்றம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அனைத்து வழிமுறைகளின் மூலமாக 12.8.2018 வரை, 5,15,669 சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வு தொடர்பான சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை தாக்கல் செய்ய படிவங்களைப் பெற்றுள்ளனர். அவற்றில் மக்கள் ஆர்வமுடன் பூர்த்தி செய்து 42,324 படிவங்கள் திரும்ப சமர்ப்பித்துள்ளனர். இதில் இணையதளம் மூலமாக மட்டும் 6,579 படிவங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சொத்து விவர சுய மதிப்பீட்டு அறிக்கையினை தாக்கல் செய்யாத சொத்து உரிமையாளர்கள், தங்களது சொத்து விவர சுய மதிப்பீட்டு விவர அறிக்கையினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, உடனடியாக சமர்ப்பிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!