Home செய்திகள் ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

by Askar

ராமநாதபுரம் மாவட்ட வட்டாட்சியர்கள் பணியிட மாறுதல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இன்று உத்தரவிட்டார். இதன்படி, பரமக்குடி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் சேகர், பரமக்குடி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், இங்கு பணியாற்றிய வரதன் ராமநாதபுரம் கேபிள் டிவி தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றிய வசந்தி பரமக்குடி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கிடங்கு மேலாளர் வரதராஜ் ராமேஸ்வரம் வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றிய பாலகிருஷ்ணன் ஆர் எஸ் மங்கலம் வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பரமக்குடி வட்டாட்சியர் ரவி, டாஸ்மாக் கிடங்கு மேலாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஆர் எஸ் மங்கலம் வட்டாட்சியர் சுவாமிநாதன் ராமநாதபுரம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்து மருத்துவ விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பார்த்தசாரதி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றிய பால சரவணன் திருவாடானை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சி யராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். பரமக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கோகுல்ராஜ் பரமக்குடி நகர நில வரி திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வரவேற்பு பிரிவுது ணை வட்டாட்சியர் ஜெயசித்ரா ராமநாதபுரம் நகர நில வரி திட்ட வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!