திருமங்கலம் அருகே அரசு புறம்போக்கு 54 சென்ட் நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததால் வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல பாதையின்றி தவிப்பு – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம்..
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வால குருநாதர் சாமி திருக்கோவிலுக்கு அருகில் , 20 குடியிருப்பு வாசிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் ,இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான திருக்கோவிலுக்கு அருகில் , 54 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால், 20 வீட்டின் குடியிருப்பு வாசிகள் செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர்.குடியிருப்பு வாசிகளின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு வழி இல்லாததால், மற்றும் குடியிருப்பு வாசிகளின் குழந்தைகள் பள்ளிகளுக்கு கால தாமதமாக சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறும் குடியிருப்பு வாசிகள், ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஊராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியும் , மின்வாரிய மின் தூண்களும் அமைந்துள்ளதால் அதனை இயக்க முடியாமலும் , ஊராட்சி நிர்வாகம் தவித்து வருவதுடன், பலமுறை வட்டாட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், குடியிருப்புவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் உரிய நடவடிக்கை எடுக்காமல் செல்ல பாதை இன்றி தவிக்கும் எங்களுக்கு உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.