Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது..

இராமநாதபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது..

by Askar

இராமநாதபுரம் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது..

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு தலைமை வகித்தார். ராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அர்ஜுன குமார், பரமக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், குடும்ப நல துணை இயக்குநர் சிவானந்த வல்லி, காசநோய், தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் தொழுநோய் துணை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். மக்களின் ஆரோக்ய வாழ்விற்கான தேவைகள் கேட்டறிந்து அக்கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிறைவேற்றப்பட்ட 481 தீர்மானங்களில் முன்னுரிமை அடிப்படையில் 182 தீர்மானங்களை மாநில சுகாதார பேரவைக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது. சாயல்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!