Home செய்திகள் ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !

ராமநாதபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மையம் ஆய்வு !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்த அரசு பொதுத்தேர்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வரும் மையங்களை பார்வையிட்டதுடன், கண் பார்வையற்ற மாணவி தேர்வு எழுதி வருவதை பார்வையிட்டு உதவியாளர் உரிய உதவிகளை வழங்கி நல்ல முறையில் தேர்வு எழுதிட உறுதுணையாக இருந்திட வேண்டுமென தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 12- ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6,698 மாணவர்களும் 7,500 மாணவிகளும் தனித்தேர்வர்கள் 280 நபர்களும் என மொத்தம் 14,478 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு 160 மையங்களில் நடைபெறுகிறது. அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் போதிய பாதுகாப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com