Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை…

மதுரையில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை…

by ஆசிரியர்

மதுரை மாவட்டத்தில் அக்கினி நட்சத்திர இறுதி நாளான இன்று (வியாழன்) இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், மக்கள் மனதும் குளிர்ந்தது. மதுரை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது. ஆனால் மதுரை நகர் பகுதியில் மட்டும் மழை பெய்யாமல், அனல் காற்று வீசி வந்தது.

மதுரை நகர் பகுதியை தவிர, சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர், மம்சாபுரம், அலங்காநல்லூர், கப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கோடை மழை பெய்தது.

திருமங்கலம் அருகே டி. கல்லுப்பட்டியில் புதன்கிழமை மாலை ஓருமணி நேரம் பலத்த மழை பெய்தது. பலத்த மழை பெய்து வருவதால், பல கிராமங்களில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு, கிணற்றுப் பாசன மூலம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஓன்றியத்தில், திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களும்அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

மதுரை நகருக்குள் மழை பெய்யாமல் வாட்டி வந்த நிலையில், அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், இன்று மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மதுரை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், தல்லாகுளம், தெப்பக்குளம், டி.ஆர்.ஓ.காலனி, சிந்தாமணி போன்ற பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. மேலும் பைபாஸ் சாலை பொன்மேனியில் உள்ள இ எம் எஸ் காலனியில் ஒரு மரம் ஒன்று விழுந்துள்ளது தற்பொழுது மழை கனமழை பெய்து வருவதால் தீயணைப்பு துறையினர் வரமுடியவில்லை குறிப்பாக தீயணைப்புத்துறை எதுக்கு தரைவழி தொலைபேசி எண் எனது தொலைபேசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக பழுதாகி உள்ளது இதனால் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து இருக்க வாய்ப்புகள் உள்ளது இதனால் தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ள எனது 101 என்னை தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இதற்கு மாற்று தொலைபேசி எண்ணை இணைய வழியாக சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களும் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது

மதுரை மாவட்டத்தின் குடிநீருக்காக வைகை அணையில் திறந்து விடப்பட்டிருந்த தண்ணீர் மதுரை வந்து சேர்ந்த நிலையில், மதுரையிலும் மழை பெய்தது மதுரை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!