மதுரையில் ராகிங் கொடுமை.. இரு மாணவர்கள் பலி..

மதுரையில் கல்லூரி மாணவர்கள் ராகிங் கொடுமையால் விஷம் அருந்தி சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வரும் முத்துப்பாண்டி மற்றும் பரத் இருவரும் படித்து வந்துள்ளனர்,

இந்த நிலையில் சக மாணவர்கள் ராகிங் செய்ததாக கடந்த 2ஆம் தேதி இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர் அப்போது சிகிச்சை பலனில்லாமல் பரத் இறந்த நிலையில் முத்துப்பாண்டி இன்று உயிரிழந்தார்,

ராகிங் கொடுமையால் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

ராகிங் செய்ததாக அந்த கல்லூரியை சேர்ந்த ஜெய்சக்தி என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்