Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி யின் பகுதி வாசிகளின் அவல நிலை கண்டு கொள்ளுமா… சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ?..

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி யின் பகுதி வாசிகளின் அவல நிலை கண்டு கொள்ளுமா… சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ?..

by ஆசிரியர்

சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி பகுதி “எச்” பிளாக் திருப்பூர் குமரன் தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் அடிபம்பு மூலம் வரும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து கருப்பாக வருகிறது இதை எத்தனை முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெறியபடுத்தினாலும் அவர்கள் வருவதில்லை அப்படியே அவர்கள் சரிபார்க்க வரும் பொழுது குடிநீர் விடும் அழுத்தத்தை அதிக படுத்திவிட்டு அது வரும் வேகத்தில் சாக்கடை நீர் அடித்து தள்ளப்பட்டு பின்பு நல்ல நீர் வரும்.

இதனை காரணம் காட்டி அதிகாரிகளும் தப்பித்து விடுவார்கள் மீண்டும் ஒர் நாள் கழித்து அப்பகுதி வாசிகளுக்கு அதே நிலைதான் இந்த நிலை எப்போது தான் மாறுமோ என்று  புலம்பும் அப்பகுதி வாசிகள்.

மேலும் அப்பகுதியில் எப்பொழுதும் உயிர் பயத்துடன் தான் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிக்கால் வாரியம் வழங்கும் நீரை பருகி வரும் அவல நிலை அப்பகுதி மக்களுக்கு உள்ளது இதனால் காலரா;மலேரியா, டெங்கு போன்ற உயிர் கொள்ளி நோய்கள் வந்து விட்டால் என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வருகின்றனர்… இந்த நிலை மாறுமா அல்லது எல்லாவற்றை போல் இதுவும் புறம் தள்ளபடுமா…? பொருத்திருந்து பொதுமக்களுடன் பார்போம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com