இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் (KNACK MEET)!!

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள்  எளிதாகவும்,நன்றாகவும், சாமர்த்தியமாகவும் ஒரு செயலை செய்து முடித்திடும் திறமைநிகழ்ச்சி (KNACK MEET) பள்ளி முதல்வர் திரு S நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி மாணவி அப்ஸின் நிஷா அனைவரையும் வரவேற்றார்.. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்கள், நகரங்கள்என்ற பாகுபாடு இல்லாமல் வீதிகளில் சிறுவர்களும், சிறுமிகளும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டுடிருப்பார்கள். ஆனால் இன்று தொலைக்காட்சி , கணிணி , மணிக்கணிணி , அலைபேசி போன்றவற்றில் ஆக்கிரமிப்பு மற்றும் கல்வியில் போட்டி போன்றவற்றால்விளையாட்டு என்பது குழந்தைகளிடம் அறவே மறந்துவிட்டது.  

பண்டைய காலத்து விளையாட்டை மாணவர்கள் நடித்துக்காட்டி அதனால் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கியத்தை பற்றிவிரிவாக எடுத்துரைத்த்னர். தட்டாங்கல் , பல்லாங்குழி, பூப்பரிக்க வருகிறோம், தாயம், சில்லு தோடு , தட்டாமாலை , கும்மி, கோலாட்டம், பாண்டி, கண்ணாமுச்சி, புசணிக்கிகாய், குலை குலைமுந்திரிக்காய் , ஒரு குடம் தண்ணீர் ஊத்தி , கர கர வண்டி , கிச்சு கிச்சு தாம்பலம் , குலக்கட்டை , நொண்டி , இவைபண்டைய காலத்து பெண்களுக்கான விளையாட்டு .

ஆடுபுளி ஆட்டம், கபடி, ஜல்லிக்கட்டு, உரியடி , வழுக்குமரம், சிலம்பாட்டம் , வண்டிப் பந்தையம் , ல்தூக்கிகணக்குப்பிள்ளை , பந்து , பச்சைக் குதிரை , பம்பரம் , புளியங்கொட்டை , கள்ளன் போலிஸ், இவை பண்டையகாலத்து ஆண் சிறுவர்களுக்கான   விளையாட்டு.

இதனால் கவனிக்கும் திறன் , கை நரம்புகள் , கால்நரம்புகள் , தண்டு வட எழும்பு , நினைவுத்திறன் , கணித அறிவு, குறள் வளம் , பார்வைத் திறன் , நரம்புகள் சீராக செயல்பட , இடதுபக்க மூளையின் செயல் திறன் அதிகரித்தல் , மூட்டு வழி, கை கால் வழி, என்ற பேச்சுக்கே இடம்மில்லாமல்  பண்டையகாலத்து விளையாட்டை  விளையாடி  ஆரோக்கியமாய்வாழ்ந்து வந்தனர்.

இன்று விளையாட்டே அற்று போய் கை கால் வழி, மூட்டுவழி,  நினைவு திறன் அற்று , குறைந்த வயதிலேயே பார்வைசெயல் இழந்து, பலவித புதுப்புது நோய்களால் பாதிகப்பட்டுவாழ்கிறார்கள் என்று விளக்கமாக செயல் வடிவத்தில் நடித்துகாட்டினார்கள்.

இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தத்துருபமாகநடித்துக் காட்டினர். மேலும் கணித  சூத்திரம் அனைத்திற்கும் வழிகாட்டியாக உள்ளது அதனை எளிதாக அறிந்துக்கொள்ளுதல் பற்றி விரிவாக விளக்கங்களுடன்எடுத்துரைத்தனர். கணித சூத்திரங்களை எளிதாக அறிந்துசெயல்படுத்தினால் நம் வாழ்கை முழுவதிற்கும் பயன்உள்ளதாக அமையும். கணிதமே இன்றைய அனைத்துவளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து மாபெரும் மாற்றத்தைஉருவாக்கி வருகிறது என மாணவர்கள் பலவிதவிக்கங்களை செய்துக்காட்டி எடுத்துரைத்தனர்.

ஆங்கில புலமையை  வளர்த்துக் கொள்ள பள்ளியில்எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களுகிடையேஆங்கிலத்தில் இலக்கணத்துடன் பேசி ஆங்கிலம்அனைத்திற்கும் உறுதுனையாக உள்ளது என விளக்கிகூறினார்கள் . மாணவர்கள் தங்களின் ஆங்கில புலமையைவானொலி வாசிப்பு மூலமாக நடித்துக் காட்டினர்.

மாணவர்கள் இராசயன மாற்றங்களால் ஏற்படும்வளர்ச்சிகள் பற்றி பலவித செயல்முறைகளை செய்து காட்டிஅனைவரும் எளிதில் புரியும் டி எடுத்துரைத்தனர். அறிவியல்வளர்ச்சியினால் தான் இன்றைய உலகம் மாபெரும் மாற்றத்தைஏற்படுத்தி உலக பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது . மேலும்  நாம், வாழ்கின்ற இடத்தை சுற்றுச்சுழல் பாதிக்காமல்பாதுகாப்பது என்பதனை நடித்துக் காட்டினர். தகவல்தொழில்நுட்ப சாதனங்களை ( அலைபேசி) முக்கியநிகழ்வதில் தவிர்த்தால் தான் நாம் செய்ய நினைத்துள்ளகாரியத்தை  வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதனைநடித்துக் காட்டினர்.      

ஆராச்சியாளர்கள் உலக நாடுகள் படிப்படியாக எவ்வாறுவளர்ந்து இன்று  மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது . நம்இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்பிரேசங்கள் மக்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை நடித்துக்காட்டினார்கள். ,ேலும் காணொளி மூலம் பலவிதவிளக்கங்களை விரிவாக எடுத்துரைத்தனர். ,ாடலிங்மூலமாக நம் இந்தியாவின் வளர்ச்சி பாதையைஎடுத்துரைத்தனர் . மேலும் நமது இந்திய இரானுவத்தின்வளர்ச்சிகள் பற்றி விரிவாக நடித்துக் காட்டினார்கள் .

மானவரிகளின் இந்த பல்வேறு கலைநிகழ்ச்சியின் மூலம்தாங்கள் படிக்கும் தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தினை எழிதாகவும்சாமத்தியமாகவும் நன்றாக புரியும் படி கற்றுக் கொள்ளலாம்என்பதனை அறிவுப் பூர்வமாக செய்து காட்டியது அனைத்துமனவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் பயன் உள்ளதாகஇருந்தது . இதனை கண்டு கழித்த அனைத்து பெற்றோர்களும்எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்து பெருமிதம் பெற்றனர்.

நன்றியுரை பள்ளி மாணவி புளோரினா வழங்கினார் .

#Paid Promotion