Home செய்திகள் கடலாடி புனவாசலில் எருதுகட்டு விழா..

கடலாடி புனவாசலில் எருதுகட்டு விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம்      மாவட்டம் கடலாடி அருகே     ஏ.புனவாசல் கிராமத்தில் வீற்றிருக்கும்  ஐயனார் மற்றும் ஏகநாதர் கோயில் புரவி எடுப்பு விழாவை யொட்டி,      எருது விடும் நிகழ்ச்சி    நடைபெற்றது.

இந்த விழா சுமார் 14 ஆண்டுக்கொருமுறை நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.        இதில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த சுமார்  16 மாடுகள் பங்கேற்றன . இதில்     இராமநாதபுரம்,  மதுரை,  ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார்  40   மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.  சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கம், பித்தளை பாத்திரங்கள் பரிசாக      வழங்கப்பட்டது.      பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராம மக்கள்    ஆயிரக்கணக்கானோர் ஆண்களும் பெண்களும் திரண்டனர்.    சிவகங்கையைச் சேர்ந்த மாடு பார்வையாளர் கூட்டத்தில் புகுந்ததால் இருவர் காயமடைந்தனர் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது .    காஞ்சிரங்குடி ஆதித்தன் என்பவரது மாடு நீண்ட நேரம் மாடுபிடிவீரர்களிடம் மல்லுக்கு நின்று விளையாட்டு காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில்    கடலாடி ஒன்றிய அதிமுக துணை செயலாளர் சண்முகபாண்டியன் மற்றும் முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் ,        மற்றும் திமுக  முன்னால் அமைச்சர் சு.ப.தங்கவேலன், அம்மா மக்கள்  முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வ.து.ந. ஆனந்த், கடலாடி ஒன்றிய செயலாளர் பத்மநாபன் உள்பட ஊர் பெரியவர்களும், சமுதாய பெரியோர்களும் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் போலீசார்    பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!