Home செய்திகள் மணல் மாஃபியாக்களை கைது செய்ய வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

மணல் மாஃபியாக்களை கைது செய்ய வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

கடலாடி மண்டல துணை வட்டாட்சியரை தாக்கிய மணல் மாபியாக்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் 14.12 .2018 இல் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த டிராக்டரை கடலாடி மண்டல துணை வட்டாட்சியர் ஆர், செந்தில்வேல் முருகன் வழி மறித்து பிடிக்க முயன்றார். அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திருட்டு மணல் கடத்தும் மாபியாக்கள் தப்பிச் சென்றனர்.புகார் அளித்த பிறகும் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது நடவடிக்கை இல்லை. துணை தாசில்தாரை தாக்கிய கும்பலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, கீழக்கரை, உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் இன்று (.17.12.18) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டக் தில் மாவட்ட தலைவர் பழனிக்குமார், துணைத் தலைவர் வரதராஜன், இணை செயலாளர் காசிநாத துரை, வட்ட தலைவர் சிவக்குமார், வட்ட கிளை துணை தலைவர் சேதுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!