Home செய்திகள் பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்..

பாவூர்சத்திரத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் வணிகர்கள் சங்கம், காமராஜர் தினசரி மார்க்கெட் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும். பாவூர்சத்திரத்தில் புதியதாக அமைக்கப்படும் மேம்பாலத்தின் இரு பக்கங்களிலும் போர்கால அடிப்படையில் தார் சாலை அமைத்து தரவேண்டும். இதுவரை தொடங்கப்படாத ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவாக துவங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கு முன்பாக தோண்டப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் குழிகளை சீரமைக்க வேண்டும். தென்காசி ஆசாத்நகர் முதல் நெல்லை பழையபேட்டை வரையிலான புறவழிச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். தென்காசி-நெல்லை பழைய சாலையையே புதிதாக விரிவாக்கம் செய்வதால் அதற்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

பாவூர்சத்திரம் நகர வணிகர்கள் சங்கதலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் ஆர்.கே.காளிதாசன், கன்னியாகுமரி மண்டலம் மற்றும் தென்காசி மாவட்ட வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் டிபி.வி வைகுண்ட ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கீழப்பாவூர் முன்னாள் ஒன்றிய தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ், காமராஜர் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் நாராயண சிங்கம், நிர்வாகிகள் தங்கராஜா, மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், கே.பி.முருகேசன், அருணோதயம், கே.பி.கே.குமார் பாண்டியன், வணிகர் சங்க நிர்வாகிகள் விஜய் சிங்ராஜ், பிச்சையா ஆரோக்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர் சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!