Home செய்திகள் குழந்தைகளுக்கான பாதுகாப்பு  விழிப்புணர்வு நடைப்பயண பேரணி..

குழந்தைகளுக்கான பாதுகாப்பு  விழிப்புணர்வு நடைப்பயண பேரணி..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.17 – இராமநாதபுரம் மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயண பேரணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. எஸ்பி தங்கதுரை முன்னிலை வகித்தார். கலெக்டர் பா விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவிலான குந்தைகள் தின விழா, உலக குழந்தைகளுக்கு வன்முறைக்கு எதிரான தடுப்பு தினம், சர்வதேச குழந்தைகள் தின விழா நடைபெற்று வருகின்றன.

இதனடிப்படையில் மக்கள், குழந்தைகள் தெரிந்து விழிப்புணர்வு பெற்றும் வகையில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வள்கொடுமைகளை தடுப்பதே இதன் நோக்கமாகும். பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்த பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பெற்றோரும், குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

இப்பேரணியில் கல்லூரி மாணவிகள் 300-க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளி தலா ஒரு மாணவர் வீதம் தேர்வு செய்து அவர்களுக்கான ஒரு வார பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சத்திய நாராயணன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபவதி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!