Home செய்திகள் தென்காசி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..

தென்காசி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்..

by ஆசிரியர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுகூட்டம், (DISHA COMMITTEE) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்டம், தேசிய சமூக உதவித் திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமைத் திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம், ஷியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கம், ஐல் ஜீவன் மிஷன், வேளாண்மைத்துறை, வனத்துறை, மருத்துவத்துறை, பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என குழுவின் தலைவர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம்.குமார் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), செ.கிருஷ்ணமுரளி (கடையநல்லூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!