Home செய்திகள் உசிலம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு இரு வேறு இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

உசிலம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு இரு வேறு இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலபுதூரில் உள்ள இருளாயி தேவர் நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் காலி குடத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடனடியாக நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்..

இதே போல் உசிலம்பட்டி அருகே மர்தரை கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து மாதரையில் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கிராமமக்களை கலைந்து போகச் செய்தனர். உசிலம்பட்டியில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com