Home செய்திகள் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் பாதியில் முடிந்த கிராமசபை கூட்டம்..

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் பாதியில் முடிந்த கிராமசபை கூட்டம்..

by ஆசிரியர்

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் கிராமசபைக்கூட்டத்தில் கிராமத்தில் நடந்த ஊழல் பற்றி பொதுமக்கள் கேட்ட கேள்விளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாதியில் கிராம சபைக்கூட்டத்தை முடித்தனர்.

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் அதன் ஊராட்சி மன்றத்தலைவர் மகேஷ்வரிபாண்டி தலைமையிலும் கிளர்க் முத்துகல்யாணி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் கணக்குவழக்குகள் குறித்த பொதுமக்களின் கேள்விக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மழுப்பலாக அதிகாரிகள் பதிலளித்தனர். மேலும் ஆரியபட்டி கிராமத்தில் இயங்கி வரும் நூலகத்திற்கு வரும் தனிநபருக்கு நாளென்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை வசூல் செய்வதாகவும் அதை கணக்கில் முறையாக தெரிவிக்காமல் கிளர்க் முத்துகல்யாணி அவரது சொந்த செலவிற்காக செலவழித்து வருவதாகவும் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. மேலும் பள்ளிகளில் இருக்கும் கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறை மூடப்பட்டு நிலையில் இருப்பதாகவும் தெருவிளக்கு கேட்டும் இதுவரை தெருவிளக்கு அமைத்துக் கொடுக்கவில்லையென்றும் சரமாரியாக கிராமமக்கள் குறைகளை தெரிவித்து கேள்வி எழுப்பினர்.ஆனால் கிராமமக்களின் எந்தவொரு கேள்விக்கும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் குறைதீர்க்கும் முகாமை முடித்துவிட்டனர் இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பாதியில் எழுந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com