Home செய்திகள் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 12/06/2019 அன்று மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்…

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 12/06/2019 அன்று மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம்…

by ஆசிரியர்

விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து மக்களுக்கு எதிரான பேரழிப்பு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு திணித்து வருகின்றது.

குறிப்பாக எரிவாயு குழாய் பதிப்பு திட்டம், ஹைட்ரோகார்பன், எட்டு வழி சாலை,உயர் மின் கோபுரம்,அனல்மின் நிலையங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், அணுமின் திட்டம்,சாகர் மாலா போன்ற திட்டங்களை மக்களின் கருத்து கேட்பின்றி தனியார் கார்ப்பரேட் நலனுக்காக செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகிறது.

இவ்வாறான பேரழிவு திட்டங்களுக்கு எதிராக ஜூன் (12.06.2019) அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் முதல் இராமநாதபுரம் வரை சுமார் 600 கிலோமீட்டர் தொலைவிற்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற உள்ளது.

இதில் முக்கிய அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள், விவசாய பிரதிநிதிகள், மக்கள் நல ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என எவ்வித பாகுபாடின்றி ஒன்றுபட்டு போராட ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

உழவனே உலகின் உயிர்நாடி என்பதை மறந்து வேளாண் மண்டலத்தை அழிக்க துடிக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி போன்ற கார்ப்பரேட் கயவர்களை இம்மண்ணில் இருந்து அப்புறப்படுத்துவோம், நாளைய இளம் தலைமுறையினரின் வாழ்விற்காக எந்த துயரங்களையும்/தியாகங்களையும் தாங்கி கொண்டு முழுமையான அறவழி போராட்டங்களை முன்னெடுப்போம்.

மக்களின் நலனுக்காக நடைபெற உள்ள இந்த மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் மக்கள் திரளாக கலந்துக் கொண்டு வலுவான/வலிமையான எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டுமென தூத்துக்குடி பேரழிவு திட்ட எதிர்ப்பு மக்கள் சார்பில் சமூக செயற்பாட்டாளர் அக்ரி பரமசிவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!