சென்னை புதுக்கல்லாரி ஸ்போர்ட்ஸ் கமிட்டி தலைவராக இஸ்லாமிய பள்ளி குழுமத்தின் தாளாளர் நியமனம்….

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் செயலாளர் மற்றும் தாளாளராகிய எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் சென்னை புதுக்கல்லூரி விளையாட்டு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும் தென்னிந்திய முஸ்லிம் கல்வி சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினராகவும், ராமநாதபுரம் மாவட்ட குத்துச் சண்டை செயலாளராகவும் உள்ளார்.

இது பற்றி எம்.எம்.கே முகைதீன் இப்ராகிம் கூறியதாவது,  “மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு விளையாட்டும் முக்கியம், மாணவர்கள் விளையாட்டு மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவது மட்டுமல்லாது நிறைய வேலை வாய்ப்புகளும் எளிதாக பெறலாம், இனி வரும் காலங்களில் நிறைய விளையாட்டு வீரர்களை உருவாக்க தனி கவனம் செலுத்தப்படும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும், கல்லூரி சேர்க்கை நடைபெறும் போது விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்றார்.