Home செய்திகள் உசிலம்பட்டியில் போலி விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டியில் போலி விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் 61 கிராம மக்களின் பாசன வசதி குடிநீர் வசதிக்காக கட்டப்பட்டது 58 கிராம கால்வாய்.இக்கால்வாய் பாரமரிப்பு பணிகளை பார்வையிட்டு குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு உசிலம்பட்டி பகுதி விவசாயிகளால் உசிலை தாலுகா 58 கிராம பாசன கால்வாய் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கப்பட்டு 2009ல் முறைப்படி பதிவு பெற்று செயல்பட்டு வருகின்றது.இச்சங்கமே வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் திறக்க விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து ஆளும் அரசுக்கு எதிராக போராடி வருகின்றது. இந்நிலையில் கடந்த காலங்களில் சிலர் சங்கத்தின் பெயரில் பணவசூல் உள்ளிட்ட தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதால் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டனர்.தற்போது இவர்கள் இதே பெயரில் ( 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் ) பதிவு பெறாத சங்கத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கிற்கு நன்றி செலுத்துமட விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விவசாயிகள் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பதிவு பெறாத போலி சங்கமான 58 கிராட பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பழனி நகர்மன்றத்தலைவர் சகுந்தல மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பதிவு பெற்ற சங்கத்தினரும் இந்நிகழ்ச்சி நடத்த காவல்துறையினரிடம் விண்ணப்பித்திருந்த நிலையில் பதிவு பெறாத சங்கத்திற்கு அனுமதி வழங்கி அந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டிருப்பது அவர்களின் சட்ட விரோத நடவடிக்கைக்கு திமுக துணை போகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இனி வரும் காலங்களில் 58 கிராhம கால்வாயில் தண்ணீர் வர போராடி திமுக அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்ப்படுத்தி வரும் உண்மையான 58 கிராம கால்வாய் சங்கத்தின் போராட்டங்களை இந்த போலி சங்கத்தின் மூலம் முறியடிக்க பயன்படுத்தலாம் என்பது சமூக ஆர்வலர்களின் ஐயமாக உள்ளது.

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com