Home செய்திகள்உலக செய்திகள் ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களுக்கு பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும்; நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கம் வலியுறுத்தல்..

ஆபத்தான நிலையில் உள்ள பாலங்களுக்கு பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும்; நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்கம் வலியுறுத்தல்..

by Abubakker Sithik

நெல்லையில் ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும் பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் பெய்த கனமழை வெள்ளத்தின் காரணமாக நெல்லை டவுண் வேணுவன குமாரர் கோயில் தெரு, சற்று தூரத்திலுள்ள பெரிய தெரு ஆகிய இரண்டு பாலங்களின் பாதுகாப்பு சுவர்கள் இடிந்து விழுந்து விட்டது. பள்ளிக்கு சென்று வரும் மாணவ மாணவியர்கள், வயதானவர்கள், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் அனைவரும் இந்த பாலங்களை கடந்து செல்வது பாதுகாப்பற்றதாக உள்ளது. ஆதலால் இந்த இரு பாலங்களுக்கும் பாதுகாப்பு சுவர்களை விரைவாக ஏற்படுத்தி பொது மக்களின் அச்சத்தை போக்கிட ஆவன செய்திட வேண்டும். அதுவரை இந்த பாலங்களில் சுவர்கள் இல்லாததை அடையாளப்படுத்தும் வகையில் தடுப்புகளை வைத்திட வேண்டும் என நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கத்தின் தலைவர் எம். முஹம்மது அய்யூப் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!