கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் பதவி ஏற்பு விழா மற்றும் கிறிஸ்மஸ் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி………

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் பதவியேற்பு நிகழ்ச்சி கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவராக மீண்டும் அருளாடும் பெருமாள் பதவியேற்றார். பின்னர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் வருகின்ற கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட மகளிர் அணி தலைவி மைதீன் பாத்து,மாவட்ட மகளிரணி பொருளாளர் ரஞ்சிதா முத்தையா, மாவட்ட மகளரணி செயலாளர் ஜெயா கணேசன்,மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், முத்துகுமார் ஆகியோ கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு