Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காஞ்சிரங்குடியில் அம்மா மினி கிளினிக்… ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்…

காஞ்சிரங்குடியில் அம்மா மினி கிளினிக்… ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்…

by ஆசிரியர்

தமிழக அரசு கடந்த 14ஆம் தேதி அம்மா மினி கிளினிக் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராம பகுதிகளில் திறப்பதற்கு ஆணை பிறப்பித்து கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் மினி கிளினிக் இன்று திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 66 அம்மா மினி கிளினிக்குகள் திறப்பதற்கு சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் திருப்புல்லாணி ஒன்றியம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். மேலும் வட்டார வள மருத்துவ அதிகாரி டாக்டர் செய்யது ராசிக்தீன், உள்ளிட்ட பல மருத்துவர்களும் கலந்து கொண்டனர் மற்றும் அதிமுக திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கீழக்கரை நகர கழக செயலாளர் மற்றும் 5வது வார்டு உறுப்பினர் பாக்கியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அம்மா மினி கிளினிக் செயல்பாடுகள் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com