Home செய்திகள் தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..

by ஆசிரியர்

​தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐ.பி.எஸ் அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்ட மாதாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா இ.கா.ப அவர்கள் குற்றங்கள் நடக்காவண்ணம் தடுப்பது குறித்தும், நடந்த குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிரிகளுக்கு தண்டணை பெற்றுத்தருவது குறித்தும், அதே போன்று சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டோரை விரைந்து காப்பாற்றி அவர்களுக்கு சிகிச்சையளிப்பது குறித்தும் அறிவுரை வழங்கினார்கள். அதே போன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அனைத்து நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்களையும், அவைகள் ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து அந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன்ää உதவி ஆய்வாளர் ராஜாமணி தலைமை காவலர் செந்தட்டி மற்றும் சின்னத்துரை ஆகியோர் தூத்துக்குடி மட்டக்கடையில் இயங்கி வரும் கனரா வங்கி மோசடி வழக்கில் விரைவில் குற்றவாளியை கைது செய்து ரூபாய் 5,15,000/- பணம் பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றியதற்காகவும் தாளமுத்து நகர் கொலை வழக்கில் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்ததற்காக சார்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோரையும் நீண்ட காலம் வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகளை கைது செய்ததற்காக தெர்மல் நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் லெட்சுமணன் முத்துப்பாண்டிää தலைமை காவலர்கள்; ராஜ்குமார் காவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, ரமேஷ் கண்ணன்ää செந்தில்குமார், பெரிய நாயகம் ஆகியோரையும்ää சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன், காவலர்கள் சிவக்குமார் மற்றும் கலைவாணர் ஆகியோர் இரவு ரோந்து பணியில் 200 கிலோ கடல் அட்டை பிடித்து சிறப்பாக பணியாற்றியதற்காகவும், மதுவிலக்கு வழக்கு மற்றும் இதர வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆறுமுகநேரி உதவி ஆய்வாளர் மாடசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கணபதி, தலைமை காவலர்கள் சற்குணம், மாரிராஜன், சொர்ணராஜ், இசக்கியப்பன், எழில் நிலவன் ஆகியோரையும் நாலாட்டின் புதூர் கொலை வழக்கு சம்மந்தப்பட் எதிரிகளை விரைந்து கைது செய்ததற்காக ஆய்வாளர் திருமதி. ஜீடி, சிறப்பு சார்பு ஆய்வாளர் விநாயகம், தலைமை காவலர்கள் உலகநாதன் மற்றும் ராமதிலகம் ஆகியோரையும்ää சி.சி.டி.என்.எஸ் ல் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தனராஜ்ää தலைமை காவலர்கள் செந்தில் மற்றும் அருள்சிகாமணி ஆகியோரையும் சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பாää இ.கா.ப அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்ராமுää காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. பிரகாஷ், ஊரகம் திரு. முத்தமிழ்ää திருச்செந்தூர் திரு. தீபு ஸ்ரீவைகுண்டம் திரு. சகாய ஜோஸ், சாத்தான்குளம் திரு.பாலச்சந்திரன்ää கோவில்பட்டி திரு. ஜெபராஜ், விளாத்திக்குளம் திரு. தர்மலிங்கம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. முகேஷ்குமார், மாவட்ட குற்ற ஆவண காப்பகம் திரு. லிங்கத்திருமாறன்ää மாவட்ட குற்றப்பிரிவு திரு. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன், காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன் ஆகியோர் உடனிருந்தார்.

செய்தியாளர்:- அஹமது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!