Home செய்திகள் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்..

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.20 –  இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாமக அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.  மாவட்ட செயலர் அக்கிம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செயலர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி ஒன்றிய செயலர் மக்தூம் கான் வரவேற்றார். மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் துவக்க வேண்டும் கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும். வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12ல் 7 பங்கு நீரை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை ஆறு மூலம் உடனடியாக கொண்டு வர ஆயத்தப் பணி செய்ய வேண்டும் அப்படி வைகை ஆற்றில் வரக்கூடிய நீரை இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தில் அனைத்து உள்ள ஏரி குளங்கள் வடிகால் வாய்க்கால் அமைத்து நிரப்பி நிலத்தடி நீர் உயர்வதற்கு மட்டுமல்லாமல் விவசாயத்தை செழுமை படுத்த வேண்டும்.

வைகை நீரை கடந்த காலங்கள் போல் கடலில் கலந்து வீணடித்து விடாமல் மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். தடுப்பணைக கட்ட வேண்டும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் உயிர், உடமைகள், படகுகளை காக்க நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பசுமை தாயக மாநில துணைச்செயலர் கர்ண மஹாராஜா,  மாவட்ட துணை செயலர் ராசிக், ராமநாதபுரம் நகர் செயலர் பாலா,  மண்டபம் ஒன்றிய செயலர் வெங்கடேஷ், துணை செயலர் சாகுல், ஒன்றிய இளைஞரணி செயலர் முனியசாமி,  கீழக்கரை நகர் செயலர் லோகநாதன்,  மாவட்ட தொழிற்சங்க செயலர் லட்சுமணன்,  திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன்,  நகர் துணை செயலர் கார்த்திக், இளைஞர் சங்க செயலர் துல்கர்,  இளைஞர் சங்க அமைப்பாளர் லட்சுமணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம், செயலர் வாப்பாசா, மாணவர் சங்க செயலர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப்பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலர் இருளாண்டி, துணை செயலர் முனியசாமி கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ஒன்றிய செயலர் முஹமது ஷரீப் நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!