பாலக்கோடு பாப்பாரப்பட்டி மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சியில் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தங்கு தடையின்றி பிளாஸ்டிக் பைகள் விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு ஜனவரி 1முதல் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும், பொதுமக்கள் பயன்படுத்தவும் தடை விதித்தது. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு வகையான விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டது. ஒரு மாதம் கடந்த நிலையில் வழக்கம்போல் பிரபலமான துணிக்கடை, மளிகை கடை, பேக்கரி, காய்கறி கடை, பால்விற்பனை நிலையம், மதுகடை பார், தாபா ஓட்டல்கள் என அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் ஒளிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு அதிகாரிகள் மெத்த போக்கினால் மீண்டும் புத்துணர்வு பெறும் பிளாஸ்டிக். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிப்பது பாலக்கோடு மற்றும் மாரண்டஹள்ளி பகுதியில் உள்ள பிரபலமான துணிக்கடை, மளிகை கடை, பேக்கரி போன்ற இடங்களில் பொருட்கள் வாங்கினால் கடை உரிமையாளர் துணி கை பைகளை வைத்திருந்தாலும் கட்டாயப்படுத்தி பிளாஸ்டிக் பைகளை கொடுப்பதாகவும், துணிகடையில் உள்ளாடைகளை வாங்கும் போது பிளாஸ்டிக் பைகளை கொடுப்பதும் பிளாஸ்டிக் பைகள் வோண்டாம் என்றால் பொருட்கள் தருவதில்லை எனவும் பேரூராட்சி அதிகாரிகள் பெயரளவில் சோதனைகள் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பிளாஷ்டிக் பதுங்கி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் முற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.