நாளை (04/01/2019) இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்..

இராமநாதபுரத்தில் நாளை (04/01/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இடை நிறுத்தம் செய்தவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வயது 35க்குள் இருக்க வேண்டும்.

இம்முகாமில் கலந்து கொண்ட பின்பு இரண்டு மாத பயிற்சிக்கு பின்பு வேலை வாய்ப்பு உண்டாகும். இப்பயிற்சிக்கு கட்டணத் தொகை ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது. இம்முகாம் மூலம் வேலை வாய்ப்பு பெறும் நபர்களுக்கு தொடக்க சம்பளமாக ரூபாய்.7000/- வரை பெற வாய்ப்புண்டு.