மதுரை திருநகரில் சமூக மக்கள் விழிப்புணர்வு கூட்டம்…

மதுரை மாவட்டம் திருநகர் அருகே உள்ள மகாலட்சுமி காலனி பேருந்து நிறுத்தம் அருகே திருநகர் காவல்துறை ஆய்வாளர் முத்துபாண்டி அவர்கள் தலைமையில் மக்கள் சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவல் துறை சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் பேசுகை‌யி‌ல் தங்கள் பகுதியில் உள்ள எந்த ஒரு பிரச்சினையும், குறைகளையும் நேரடியாக எங்களிடம் கூறலாம். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெ‌ரிவித்தார். இந்த கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வி.காளமேகம், மதுரை மாவட்டம்