பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் கொடியேற்றம்..

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இந்திய தேசம் முழுவதும் கொண்டாட படுகின்றது அதன் ஒரு பகுதியாக கீழக்கரையில் இன்று 17/02/2019 லெப்பை டீ கடை அருகில் மற்றும் ஜூம்மா பள்ளி முன்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளில் கொடியெற்றும் நிகழ்ச்சி நகர் தலைவர் முபிஸ் முபஸல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் லெப்பை டீ கடை அருகே சகோ.பைசல் பாப்புலர் ஃப்ரண்ட் கொடி ஏற்றி வைத்தார். ஜூம்மா பள்ளி முன்புறம் சகோ ஆஷிக் பாப்புலர் ஃப்ரண்ட் கொடி ஏற்றி வைத்தார். நத்தம் கிளை சார்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஃபிஸ் கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் தொகுப்புரையை ஆசிக் வழங்கினார். வரவேற்புரையை ஹுசைன் இப்ராஹிம் நிகழ்த்தினார்.. ஹமீது பைசல் மற்றும் அஹமது நதீர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக 50 துணிச்சலான இராணுவ வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நம்முடைய ஆதரவை, ஆறுதலை வெளிப்படுத்தி நம்மை விட்டு பிரிந்த அந்த ஆன்மாக்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் SDPI_கட்சியின் தொகுதி செயலாளர் நூருல் ஜமான் கீழக்கரை நகர் தலைவர்க கீழை அஸ்ரப், நகர் செயலாளர் காதர்,  பொருளாளர் சகுபர் சாதிக் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் SDTU கேம்பஸ் ஃப்ரண்ட் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.