Home செய்திகள் இராமநாதபுரத்தில் இருந்து பிற நகர்களுக்கு 9 புதிய பேருந்துகள் இயக்கம்…

இராமநாதபுரத்தில் இருந்து பிற நகர்களுக்கு 9 புதிய பேருந்துகள் இயக்கம்…

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் இருந்து பிற நகர்களுக்கு 9 புதிய பேருந்துகள் இயக்கம். இப்புதிய தடங்களை தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (17.02.2019) தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தகவல்  தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் மக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் விழாவிற்கு தலைமை வகித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14.02.2019 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்கள்ப யன்பாட்டிற்காக 275 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். இவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 11 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 பேருந்துகள் ஆகும். இராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் இன்றைய தினம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 9 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று துவக்கி வைத்தார்.

புதிதாக துவக்கி வைத்தவற்றில் ராமநாதபுரம் புறநகர் கிளை மூலம் ராமநாதபுரம் – மதுரை வழித்தடத்தில் 1, ஏர்வாடி தர்ஹா – குமுளி வழித்தடத்தில் 1, சாயல்குடி-சிதம்பரம் வழித்தடத்தில் 1, ராமநாதபுரம் புறநகர் கிளை மூலம் ராமமேஸ்வரம்-திருச்சி வழித்தடத்தில் 1, பரமக்குடி கிளை மூலம்  ராமேஸ்வரம்-மதுரை வழித்தடத்தில் 1, முதுகுளத்தூர் கிளை மூலம் முதுகுளத்தூர் – சிதம்பரம் வழித்தடத்தில் 1, கமுதி கிளை மூலம் கமுதி-சேலம் வழித்தடத்தில் 1 வீதம் 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 07.7.2018 அன்று 35 புதிய பேருந்துகளும், 14.10.2018  அன்று 12 புதிய பேருந்துகளும், 12.01.2019 அன்று 11 புதிய பேருந்துகளும், இன்றைய தினம் 9 புதிய  பேருந்துகள் என 4 கட்டங்களாக இதுவரை 67 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கோமதி செல்வக்குமார், துணை மேலாளர் ஆர்.சிவலிங்கம், கோட்ட மேலாளர் வி.சரவணன்  (இராமநாதபுரம்) போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், பி.தமிழ்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!