கீழக்கரையில் போதை வியாபாரிகளை ஒழித்து கட்ட காவல்துணை கண்காணிப்பாளரிடம் மனு… இது ஒரு துவக்கம் தான்..

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரிகளால் சமூக ஆர்வலர் கொடூரமாக கொல்லப்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கீழக்கரையில் போதை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்ணும் என குரல் எழும்பியது. இதன் தொடர்ச்சியாக இஸ்லாமியா பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்்எம்.கே.முகைதீன் இபுராகிம் சமூக வலைதளத்தில் போதைக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கீழக்கரையை சார்ந்த பல்வேறு சமுதயா அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளரடம் போதை வியாபாரிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..