Home செய்திகள் மே 1 முதல் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக் கிளைக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை! அவசர வழக்குளை மட்டும் விசாரிக்க நீதிபதிகள் நியமனம்..

மே 1 முதல் சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரைக் கிளைக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை! அவசர வழக்குளை மட்டும் விசாரிக்க நீதிபதிகள் நியமனம்..

by Askar

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை ஐகோர்ட்டில் மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என்.செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.இதேபோல ஐகோர்ட் மதுரை கிளையில் மே 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ம் தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!