பேர்ல் மெட்ரிக் பள்ளியில் THINK ROOM நிகழ்ச்சி…

பேர்ல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று (16/02/2019) Thinkroom நாள் கொண்டாட்டம் நடந்தது. அதில் டாக்டர் கண்ணதாசன் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையின் உள்ளார்ந்த ஆற்றலை தூண்டும் விதமாக, Chrysalis கல்வி முறையில் எல் .கே .ஜி  முதல் 5ம்வகுப்பு வரை, வகுப்பறையில் (Thinkroom) வாய்ப்புகள் வழங்கப்பட்டு கற்றுக் கொடுப்படுகிறது .

மாணவர்கள் தாங்கள் ஒரு வருடம் கற்றுகொண்ட கல்வியை,  இன்று இந்த Thinkroomநாள் மூலமாக பல்வேறு தலைப்புக்களில்உரையாடலாகவும், வரைபட குறிப்புகளாகவும், விளையாட்டுகளின் மூலமும், வந்திருந்த பெற்றோர்களுக்கு விளக்கமளித்தனர். இந்தநாளின் மூலம் வந்திருந்த பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் உண்மையான விருப்பங்களையும் திறமைகளையும் அடையாளம் கண்டனர்.

ஒவ்வொரு குழந்தையின் திறனை வெளிப்படுத்தும் விதமாக  இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது .