Home செய்திகள் மாங்கனிக்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக: அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!!

மாங்கனிக்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக: அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!!

by Askar

மாங்கனிக்காக ‘தோட்டத்தை’ வட்டமிடும் அதிமுக: அதிகாரத்துக்காக பாஜகவை துரத்தும் அன்புமணி!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணி அமைத்துதான் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாஜகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி ராமதாஸ் நடத்தி வருகிறார். அதேவேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமதாஸை சந்தித்திருக்கிறார். பாமகவின் திட்டம்தான் என்ன?

பொதுக்குழு கூட்டத்திலேயே பாமக 12 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தத் தொகுதிகளில் பூத் கமிட்டிகள் பாமக சார்பாக அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் சொல்லப்பட்டது. பாஜகவிடம் பாமக 12 தொகுதிகளைக் கேட்டதாகவும், ஆனால் 7 தொகுதிகளை மட்டுமே பாஜக தருவதாகவும் தகவல் வெளியானது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுர இல்லத்தில் சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது.

பாஜகவுடன் இணைந்தால், பாமக கேட்கும் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெற்றி வாய்ப்பு என்பது அந்தக் கூட்டணியில் மிகவும் குறைவு. அதிமுகவுடன் இணைந்தால் கேட்கும் இடங்கள் கிடைப்பது கடினம். ஆனால், வெற்றிக்கான வாய்ப்பு என்பது அதிகம் என சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து வாக்கு வங்கியைப் பலப்படுத்தினால்தான் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமாட முடியுமென நினைக்கிறார் ராமதாஸ். ஆனால், அன்புமணி இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், வரும் தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க முடியவில்லை என்றாலும், மாநிலங்களவை சீட் வாங்கிவிடலாம் என தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார் அன்புமணி. ஆனால், கூட்டணி அதிகாரம் என்னவோ ராம்தாஸிடம்தான் இருக்கிறது. எனவே, மாங்கனியைப் பெற டைரெக்ட்டாக அப்பாவைக் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது அதிமுக.

ஏனென்றால், பாஜக தலைமையிலான மூன்றாவது கூட்டணி அமைந்தால், அதனால் அதிமுகவுக்கு சிக்கல். குறிப்பாக, ஓபிஎஸ் இல்லாத அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில், வன்னியர்கள் வாக்குகளைக் கைவிட அதிமுக தயாராக இல்லை. இதை மனதில் வைத்துதான் ராமதாஸிடன் அதிமுக பேச்சுவார்த்தைத் தொடர நினைக்கிறது. இதில் பாமகவுக்கும் பலன் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதேவேளையில், அதிமுகவும் பாமகவை அவர்கள் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுத்து வருகிறது. அதற்கு ஈடுகொடுத்து பாமக பேச்சு கொடுப்பது கூட்டணி கட்சிகளிடம் இடங்களை அதிகரிக்கும் ஸ்டன்ட் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால், அன்று பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவில் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சி என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது பாமக. எனவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, வேண்டிய தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பெற்றுக்கொள்ளும் என்னும் கருத்தும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், மற்றொரு தகவலாக, கடந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸுக்கு மட்டும்தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்படுவதாக தீர்மானம் போடப்பட்டது. ஆனால், இதில் அன்புமணிக்கு விருப்பமில்லை என்னும் பேச்சுக்கள் அப்போதே அடிபட்டன. ராமதாஸ் வயதைக் காரணம் காட்டி அவரை அரசியலில் இருந்து விலகி தன்னிடம் முடிவெடுக்கும் பொறுப்பைக் கொடுக்குமாறு கேட்கிறார் அன்புமணி. ஆனால், அதற்கு ராமதாஸ் இசைவு கொடுக்கவில்லை.

பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி ராமதாஸ் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், ராமதாஸ் அவர்களுக்கோ அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விருப்பம் மேலிடுகிறது. இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் அன்புமணி பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில், அதிமுகவுடன் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதனால், உட்கட்சியில் இது புகைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!