Home செய்திகள் மர்கஜ் அல் இஸ்லாஹில் ஓசோன் தின விழிப்புணர்வு கூட்டம்.. ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு மரம் நடுவோம் திட்டம்.!

மர்கஜ் அல் இஸ்லாஹில் ஓசோன் தின விழிப்புணர்வு கூட்டம்.. ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு மரம் நடுவோம் திட்டம்.!

by mohan

புதுவை மனப்பட்டு வார்கால் ஓடைவீதியில் இயங்கி வரும் “மர்க்கஜ் அல் இஸ்லாஹ்” கல்வி மற்றும் சேவைக்கான அறக்கட்டளை சார்பில் ஓசோன் தின விழிப்புணர்வு கூட்டம் & மரம் நடும் நிகழ்வு இன்று 16/9/2019 அன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது. இச்சேவை ஆஸ்ரமம் குருநாதர் மௌலானா, மௌலவி, சையிது நிஜாமிஷாஹ் நூரி பாக்கவி, அவர்களால் நிறுவப்பட்டு பல வருடங்களாக மருத்துவ சேவை, கல்வி சேவை போன்ற பல்வேறு பொது சேவைகளில் ஜாதி,மத வேறுபாடின்றி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சென்ற மழை வெள்ளக் காலங்களில் வெள்ள நிவாரண பணிகள் போன்ற சேவைகளிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக இன்று உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு மரம் நடுவோம் திட்டத்தை அறக்கட்டளையின் கீழ் நடைபெறக்கூடிய மர்கஜ் அல் இஸ்லாஹின் ஒவ்வொரு மாணவர்களும் ஒரு மரத்தை நட்டு அவர்கள் படிக்கும் காலம் முழுவதும் இதனை முறைப்படி பராமரித்து வளர்ப்பார்கள் என முடிவெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறக்கட்டளையின் நிர்வாகியும் கல்லூரியின் முதல்வருமான மௌலவி ஆதில் நிஜாமி அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள, சமூக ஆர்வலர்கள்,என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!