Home செய்திகள் நத்தம் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் சாலை மறியல்

நத்தம் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் பொதுமக்கள் சாலை மறியல்

by mohan

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் செந்துறையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் வாகனங்களை பரிசோதனை ஈடுபட்டு வந்தனர். இதில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதைதொடர்ந்து அப்போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது இதை அப்பகுதியில் கடை நடத்தி வரும் செல்வக்குமரன் என்பவர் உட்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர் .இயக்காத வாகனங்களுக்கும் பிடித்ததாக சப் இன்ஸ்பெக்டரை மகாராஜாவை கேட்டதற்கு நான் தூத்துக்குடிகாரன். அப்படித்தான் வழக்குப்பதிவு செய்வேன் .சட்டமா பேசுகிறாய் என்று கூறி அடித்ததாக தெரிகிறது .மேலும் அங்கு நின்று கொண்டிருந்த வண்டிகள் அனைத்தையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து நத்தம் காவல் நிலையத்திற்கு ஊர் முக்கியஸ்தர்கள் சென்று சமாதானம் பேசியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை நாளை காலை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் அபராத தொகையை செலுத்த சொல்வதாகவும் சொல்லிவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் செல்வகுமரன் வீட்டுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா செல்வகுமாரின் அப்பா ராஜேந்திரனிடம் உன் மகன் எங்கே வரச்சொல் என்று கேட்டுள்ளார். அவரும் சென்று தனது மகனை எழுப்பியுள்ளார் .அப்போது மாதவராஜா மற்றும் அவருடன் வந்த இரண்டு காவலர்கள் போலீஸ் நண்பர் குழுவை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேரும் சேர்ந்து செல்வக்குமரனை தரதரவென இழுத்து உள்ளனர். அப்போது அவரது தந்தை ஏன் இழுத்துச் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். தாங்கள் இப்பொழுதுதான் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி விட்டு வந்ததாகவும் காலையில் வருவதாகவும் கூறியுள்ளனர். அப்போது கோபமடைந்த மாதவராஜா தனது கைத்துப்பாக்கியால் செல்வகுமரனின் தந்தையை தலை,கண்,கழுத்து பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார். கோவம் தீராத சப் இன்ஸ்பெக்டர் அவரது வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டி உள்ளார்.இதில் அவர் படுகாயமடைந்துள்ளார். செல்வக்குமரனையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காயமடைந்த ராஜேந்திரன் செந்துறை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். . இதுகுறித்து கேள்விப்பட்ட அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் செந்துறை பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் மற்றும் கடையடைப்பில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடையாத பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ரூரல் துணை கண்காணிப்பாளர் வினோத் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவது கைது செய்தவர்களை விடுவிப்பதாக கூறியதையடுத்து இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!