பாம்பன் தூக்கு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து ரயில்வே வாரியம் முடிவெடுக்கும்..

இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் தங்கும் விடுதி, கழிப்பறை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டிரேயா இன்று (16/02/19) ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக ரயில் நிலையத்தில் தேவையான வசதிகள் செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாம்பன் ரயில் தூக்கு பாலம் 04/12/ 2018 ல் ஏற்பட்ட விரிசலால் இன்று வரை ரயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை. பாம்பன் தூக்கு பாலத்தின் அனைத்து பணிகள் முடிவடைந்து விட்டது. மீண்டும் ரயில் போக்குவரத்து இயக்குவது தொடர்பாக இந்திய ரயில்வே வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.