பழனி முருகன் கோவில் உண்டியல்களில் நூதன முறையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை திருடியவர் கைது..

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுக பாளையத்தை சேர்ந்த முரளி (வயது 47) என்பவர் காணிக்கை செலுத்துவது போல காகிதத்தை ஒட்டக்கூடிய பசையை உண்டியல்களின் துவாரத்தில் தடவி வைத்து அதில் ஒட்டியிருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை நூதன முறையில் திருடியதை கண்டு அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் அவர் ஒப்புக்கொண்டார். அதடிப்படையில் அவரை கைது விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- ஃப்க்ருதீன், திண்டுக்கல்