திண்டுக்கல் வன பகுதியில் சாய்ந்த மரங்களை வெட்டி எடுத்து வந்த லாரிகள் பிடிக்கப்பட்டன…

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கஜா புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி எடுத்து வந்த லாரியை வனத்துறையினர் சோதனைச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். இப்பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் புயலால் சாய்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருவதை பயன்படுத்தி சிலர் நன்றாக உள்ள மரங்களையும் வெட்டி லாரிகளில் கடத்திச் செல்வதாக புகார் வந்ததையடுத்து வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மரங்களை ஏற்றி வந்த 2 லாரிகள் சிக்கின.வருவாய்த்துறையினர் அளித்த சான்றிதழை காட்டி பலர் இதுபோன்ற மரம் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மரம் வெட்டுவதில் உள்ள முறைகேடுகளை நீக்க வனபாதுகாப்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோருகின்றனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்