Home செய்திகள் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசை அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருதுகட்டு..

கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மேலவலசை அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருதுகட்டு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.13- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி மேலவலசை பொன்னும் சிறை எடுத்த அய்யனார் கோயில் 263 ஆம் ஆண்டு எருது கட்டு விழா இன்று மதியம் தொடங்கி மாலை வரை நடந்தது.

இதில் சேது கால், வெட்டுகுளம், மேலவலசை, ஆர்.எஸ்.மங்கலம், பால்கரை, பொட்டகவயல், சோழனூர், கலையனூர், காஞ்சிரங்குடி, பால்கரை, கொடி குளம், ஆலங்குளம், வாகை வயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 55 காளைகள் கலந்து கொண்டன. கவுரவத் தலைவர் அமீர், கோயில் டிரஸ்டி கிழவன், கிராம தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் இதய ரஞ்சித், பொருளாளர் மங்கள சாமி, எழுத்தர், சதீஷ் குமார், தண்டல் பால்சாமி, திருச்செல்வம் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். களத்தில் சீறிப்பாய்ந்து போக்கு காட்டிய காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!