ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை எளிதாகியது – இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இதுதவிர, அறுபதுக்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக ஓராண்டுக்கு 6,210 பேர் புதியவாகனங்களைப் பதிவு செய்கின்றனர். வாகனங்களுக்குப் பதிவு எண்வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் இங்கு நடக்கின் றன.

இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இடைத்தரகர்கள், போலி உரிமம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய ஓட்டுநர் உரிமம் பெற :

இத்திட்டத்தின்படி, மார்ச் 1-ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்களில் இனிவிண்ணப்பம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆன்லைனில் (www.parivahan.gov.in/sarathi) முழு தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் சம்பந்தப் பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அவரை நேரில் அழைத்து, ஆவணங்களைச் சரி பார்த்த பிறகு, எல்எல்ஆர் (ஓட்டுநர் பழகுநர் உரிமம்) வழங்குவர். அடுத்த 6 மாதங்களில் பயிற்சி முடித்த பிறகு, வாகனத்தை ஓட்டிக் காட்டி, ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க :

இதேபோல வாகன தகுதிச் சான்று, வாகனப் பதிவு, முகவரிமாற்றம், கட்டணம் செலுத்து தல், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்புஉள்ளிட்ட பணிகளையும் ஆன் லைனில் மேற்கொள்வதற்கான வசதி எதிர் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் என தெரிகிறது.

மேலும் போலி ஓட்டுநர் உரிமங்களை ஒழித்து, ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர் உரிமம் பெறுவது, தகுதிச் சான்று பெறுவது, வாகன வரி செலுத்துவது, புதிய வாகனங்கள் பதிவு, கட்டண வசூல் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் மேற் கொள்ளும் வசதி படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.