Home செய்திகள் மக்களை உறிஞ்சும் தனியார் பேருந்துகள்.. கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்..

மக்களை உறிஞ்சும் தனியார் பேருந்துகள்.. கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்..

by ஆசிரியர்

மதுரையில்  இருந்து சென்னை செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று ஒரு டிக்கெட்டின் விலை 1,500 ரூபாயில் இருந்து சுமார் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதை சரி செய்ய எந்த ஒரு அதிகாரியும் முயற்சி செய்யவில்லை என்பதுதான்  வேதனையான உண்மை.

மொபைல் செயலிகளான redbus மற்றும் இதர தளங்களிலும் ஒரே மாதிரி டிக்கெட்டின் விலையை அதிகரித்து வைத்தே விற்பனை செய்து வருகிறார்கள். இந்த பொது மக்கள் விரோத போக்கின் மூலம் மக்களின் பணத்தை சுரண்ட அரசு அதிகாரிகள் எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என பயணிகள் புலம்பித் தீர்க்கிறார்கள்.

மேலும் அரசு பேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்படுவதாலும், பயணிகள் வரத்து அதிகமாக இருப்பதாலும்,  தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்ல இருக்கும் பயணிகள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.  இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி தனியார் பேருந்து உரிமையாளர்கள் உரிமம் இல்லாத பஸ்களை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.  இது சம்பந்தமாக புகார் எண் 18004256151ஐ அழைத்தால், அழைப்பை எடுக்க கூட ஆள் இல்லாதது அதை விட வேதனைக்குரிய விசயம்.  இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!