50
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளபட்டி , சிலுக்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் தமிழக முதலமைச்சரின் சீரிய திட்டமான கிராம அளவிலான பட்டா மாறுதல் முகாம் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகேந்திரன், துணைத்தலைவர் சதீஷ்குமார் ஆகியோர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லலிதா, மண்டல துணை தாசில்தார் சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் சென்னா கிருஷ்ணன், பிரேமலதா, ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சத்தியா, நவாஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படம். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.